பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கதிர்காம யாத்திரை

களே வந்து மன முருகி வழிபடச் செய்யும் பேராற்றலை யுடையது அது. எத்தனையோ காலமாக அருட் புலவர் களாலும், அன்பர்களாலும், ஞானியராலும், யோகிய ராலும் பாராட்டப்பெறும் சிறப்புடையது. கடவுள் இல்லை என்ற மயக்க உணர்வு பெருகும் காலத்திலும், மக்களே இழுத்துக் கூத்தாடச் செய்கிறது. அது : மூர்த்தி இல்லை; ஆலுைம் கீர்த்தி மிகமிகப் பரந்து பெருகிவருகிறது. இந்த நாட்டில் பழனியில் முருகன் தண்டாயுதபாணி யாக எழுந்தருளி யிருக்கிருன். ஆனல் தண்டாயுதபாணி எங்கே இருந்தாலும் அவனைப் பழனியாண்டவன் என்று வழங்கும் வழக்கம் உண்டாகியிருக்கிறது. அவ்வாறே கதிர்காம முருகனுக்குக் கதிரேசன் என்று பெயர் வழங்கு கிறது. அந்தத் திருநாமத்தோடு இலங்கையில் பல இடங் களில் முருகன் எழுந்தருளியிருக்கிருன். இந்தியாவிலும் கதிரேசன் கோயில்கள் சில உண்டு. கதிர்காமம் ஓரிடத்தில் தான் இருக்கிறது; ஆனல் கதிரேசன் கோயில்கள் பல இடங்களில் உள்ளன. கதிர்காம முருகனுடைய சிறப்புக்கு இது பெரிய சான்று அல்லவா?.

கதிர்காமக் கடவுளின் பெயரைக் குழந்தைகளுக்கு வைப்பவர்களும், அவன் பெயரால் வேறு வேறு இடங்களில் கோயில் கட்டித் தொழுகிறவர்களும், அவன் பேரைச் சொல்லிப் பிழைப்பவர்களுமாகப் பலர் கதிர்காம கினேவை எல்லா இடங்களிலும் எழுப்பிக் கொண்டே இருக்கிருர் கள். இதற்கு முன்பும் பலர் இப்படிச் செய்தார்கள்:

இனியும் செய்து வருவார்கள்.

தரிசனம்

நாங்கள் கதிர்காமம் சென்றபோது உற்சவம் ஒன்றும் இல்லை. ஆதலின் எங்கும் அமைதியே குடிகொண்