பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கதிர்காம ப்ாத்திரை

கள் வைத்து அவற்றுக்கு முன் சிறிய விளக்கை ஏற்றி வைத்திருந்தார்கள். . .

பின்பு கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள தெய்வயானை கோயிலுக்குச் சென்ருேம். அங்கே கல்யாண மண்டபம் என்ற இடத்தில் ஒரு துதவி இருந்தார். பரம்பரையாக இந்தத் தெய்வயானே யம்மன் கோயில் கிர்வாகம் இத்தகைய துறவிகளிடம் இருந்து வருகிறதாம். யாழ்ப்பாணத்தி லிருந்து வந்த குருக்கள் சிலர் அங்கே இருந்தார்கள். "எங்கே சாப்பிடப் போகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். வேறு இடத்தில் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னேம். அங்கே வரும் அன்பர்களுக்கு உணவளிக்கும் கைங்கரியத்தில் அவர்கள் ஈடுபட்டவர்கள் என்று அறக் தேன். தர்மத்துக்கு அல்ல : காசுக்குத்தான். -

விதியில் உள்ள மடங்களில் சிலவற்றைப் பார்த் தோம். பிறகு வள்ளியம்மை கோயிலுக்குச் சென்ருேம். கதிர்காம எல்லைக்குள் எந்தக் கோயிலானுலும் அதில் திரைதான் போட்டிருக்கிருர்கள். அந்தத் திரைக்குத்தான் பூசை, வள்ளியம்மை கோயிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் ஒரு முஸ்லிம் பக்தருடைய சமாதி இருக்கிறது. அவர் முத்துலிங்க ஸ்வாமி என்ற சைவப் பெரியாருடைய தொண்டராக வாழ்ந்தவர் என்று சிலர் கூறுகிருர்கள். கதிர்காமத் தலத்தில் வேறு சில முஸ்லிம் ஞானிகள் வந்து வழிபட்டார்கள் என்று தெரிகிறது. ஹிலுர் அலேஹி என்ற முஸ்லிம் பெரியார் இந்தத் தலத்துக்கு வந்து சில காலம் தங்கி யிருந்தாரென்றும் நாளடைவில் அவர் சிறந்த ஞானிய்ாயினரென்றும் ஒரு செய்தி வழங்கு கிறது. .

.. கோ. நடேசையர் என்ற அறிஞர் எழுதிய * கதிர்கா மம் என்னும் புத்தகத்தில் பின்வரும் செய்தியைக் காணலாம்.

  • கதிர்காமம்-குல.சபாநாதன் எழுகியது. ப. 34."