பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாக் காட்சிகள் 37

சாமான்களெல்லாம் கிடந்தன. யாத்திரிகர்கள் அங்கே துரங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கோயிலுக்கு ஒரே ஒரு வாசல். அதில் ஒரு திரை கட்டியிருந்தார்கள். அந்தத் திரையில் கடவுளின் திருவுருவம் இருந்தது. கப்புராளே. யரைத் தவிர வேறு யாரும் திரையைத் தாண்டி உள்ளே போக முடியாது. அந்தக் கோயில் கடவுளுடைய காதற் கிழத்தியினுடையது (வள்ளியம்மை திருக்கோயில்).

“இங்கே காட்டினிடையே வாழும் தமிழ்க்கடவுள் யார் ? தமிழர்கள் இந்தப் பெரிய கடவுளேக் கந்தசாமி என்று வழங்கினர்கள். இங்கே வாழும் புத்தர்கள் அக் கடவுளே அறிந்து கொண்டவர்களாகச் சொல்கிருர்கள். மரங்களிலும் காடுகளிலும் உள்ள பேய் பிசாசுகளே அவர் கள் அறிவார்கள். அவைகளோடு அந்தக் கடவுளும் இருக்கிரு.ராம். ஒரு காலத்தில் முன்னே சொன்ன பெரிய குன்றத்திலுள்ள மூன்று சிகரங்களில் நடுச் சிகரத்தில் இந்தக் கடவுள் எழுந்தருளி யிருந்தாராம். கடலளவும் பரந்து கிடக்கும் காட்டையும் மலேயையும் ஆட்சி புரிந்து வந்தார். அதனால்தான் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் அந்தச் சிகரத்தில் கெருப்புச் சோதி விடுகிறதாம். ஒரு நாள் குன்றத்தின்மேல் அப் பெருமான் வீற்றிருந்து கீழே ஒடிய ஆற்றையும் மரங்களையும் பார்த்தார். ஆற் றுக்கு அக்கரையில் உள்ள சமவெளியில் சென்று தங்க வேண்டுமென்று திருவுள்ளம் பூண்டார். அந்தக் காலத் திலும் அவர் தமிழ்க் கடவுளாக இருந்தார். ஆகவே அங் தப் பக்கம் வந்த தமிழர்களே அழைத்துத் தம்மை ஆற்றின் அக்கரைக்கு எடுத்துச் செல்லும்படி பணித்தார். தமிழர் கள், ‘எம்பெருமானே, நாங்களெல்லாம் ஏழைகள். நெடுக் தூரம் காடும் மேடும் கடந்து கடற்கரையிலுள்ள உப்பங் கழியில் உப்பெடுக்கப் போகிருேம். இப்போது இங்கே தங்கில்ை மழை வந்து உப்பைக் கரைத்து விடும். நாங்கள் வந்த காரியம் விணகிப் போகும். ஆகையால் ன்ங்கள் காரி