பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாக் காட்சிகள் 39

மேல் ஆணையிடுவார்கள். பொய்யாக ஆண இட்டால் கடவுள் அவர்களைத் தண்டிப்பார். நோயாளிகளும் மலடி களும் பேயாற் பிடிக்கப்பட்டவர்களும் இங்கே பிரார்த் தனே செய்வார்கள். - 'அடியார்கள் உற்சவ காலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து இந்தக் கடவுளே வழிபடுவார்கள். கடவுள் ஒரு மானேக் காதலித்துத் தம் காதலியாக்கிக் கொண்டார். தெரு வின் தென் கோடியில் உள்ள கோயிலில் அந்தக் காதலியை இருக்கச் செய்தார். உற்சவத்தில் பதின்ைகு நாட்களிலும் ராத்திரியில் கப்புராளேகள் கோயிலுக்குள் சென்று ஒரு பெரிய கறுப்பு ஆடையால் கடவுளே மூடி எடுத்து வருவார் கள். யாரும் அவரைப் பார்க்கக் கூடாது. யானேயின் மேல் கடவுளே வைப்பார்கள். அடியார்கள் ஆண்டவர் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். தங்கள் தலைமேல் கற்பூ தீபம் நிறைந்த பாத்திரங்களே ஏந்திச் செல்வார் கள். ஊர்வலம் வள்ளியம்மை திருக்கோயிலை நோக்கிச் - செல்லும், அங்கே கப்புராளேகள் தங்கள் கண்களைக் கட்டிக்கொண்டு கடவுளே யானேமீதிருந்து இறக்கி, மறைத்தபடியே வள்ளியம்மை கோயிலுக்குள் கொண்டு போவார்கள். அடியார்கள் இறைவர் திருநாம கோஷம் செய்வார்கள். பெண்கள் கப்புராளமாரின் காலில் விழுந்து வணங்குவார்கள். இப்படிச் செய்தால் பிள்ளை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கு மென்று கம்பினர் கள். கப்புராளேமார் கடவுளே வள்ளியினிடம் எடுத்துச் : சென்று வைத்து விட்டுப் போவார்கள். முரசுகள் முழங்

கவும், மணிகள் ஒலிக்கவும், எங்கும் விளக்குகளின் சுடர். ஒளிரவும் அடியார்கள் பாடி ஆடிக் களிப்பார்கள் கீழே விழுந்து வணங்குவார்கள். மறுபடியும் கப்புராளமார் கண் களைக் கட்டிக்கொண்டு வள்ளியம்மை கோயிலுக்குள்ளே சென்று, கடவுளே மூடியபடியே எடுத்து வந்து யானையின் மேல் வைப்பார்கள். மறுபடியும் தம்முடைய கோயில