பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கதிர்காம யாத்திரை

நோக்கிக் கடவுள் எழுந்தருளுவார். அடியார்கள் பின் தொடர்வார்கள்.” -

இவ்வாறு அந்த ஆங்கிலேயர் கதிர்காமத்தில் நடை பெறும் திருவிழாவை வருணித்திருக்கிருர், -

பல காலமாகவே கதிர்காமம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது என்பதும், மக்கள் இங்கே வந்து வழி பட்டுத் தம் குறை தீர்ந்தார்கள் என்பதும் இந்த வருணனே யினுல் உணர வேண்டிய செய்திகளாகும். -

மாணிக்கத் திருவுருவ முடையவன் இங்கே எழுக் தருளிய முருகன் என்பது கிச்சயமாகத் தெரியாவிட்டா லும், ஒரு காலத்தில் யாவரும் கண்டு வழிபடும் அற்புதத் திருவுருவம் ஒன்றை உடையவனகி முருகன் இங்கே எழுங் தருளியிருந்தான் என்று நம்ப இடமுண்டு,

8

கல்யாண மடம்

தெய்வயானை அம்மை கோயிலுக்கு எதிரே உள்ள தைக் கல்யாண மடம் என்று சொல்கிருர்கள். மாணிக்க கங்கைக் கரையில் சமாதி கொண்டிருக்கும் முத்துலிங்க ஸ்வாமி இந்தியாவிலிருந்து வந்தவர். அவருடைய இயற் பெயர் கல்யாணகிரி என்பது. அவர் இங்கே வந்து தங்கித் தவம் புரிந்தார். அவர் தங்கியிருந்த இடமே கல்யாண மடம் ஆகும். -

அவர் தம்முடைய தவத்தாலும் அன்பிலுைம் அங்கே வந்த அடியார்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். அக்காலத்து அரசனுடைய உதவியைப் பெற்றுத் திருக்கோயிலே அவர் செப்பஞ் செய்தார் என்று சொல்வர். இப்போதுள்ள த்ெய்வயானை அம்மை கோயிலயும் வள்ளியம்மை கோயில் யும் இவர்தாம் கட்டுவித்தாராம். . . . . . . .