பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலயாண மட10 41

முத்துலிங்க ஸ்வாமியின் காலத்துக்குப் பிறகு கல்யாண மடத்தில் ஒருவர்பின் ஒருவராக மடாதிபதிகள் வந்து அந்த மடத்தின் ஆட்சியை கடத்தி வந்தார்கள். முத்துலிங்க ஸ்வாமிக்கு அடுத்தபடி இந்த மடத்தில் எழுக் தருளியிருந்தவர் ஜயசிங்ககிரி ஸ்வாமிகள். அவர் காலத்தில் வட இந்தியாவிலிருந்து ஓர் அரசன் கதிர்காம வேலனைத் தரிசிக்க வந்தான். மக்கள் பலர் இந்தத் தலத்திற்கு வந்து வழிபட்டுத் தங்கள் குறைகளெல்லாம் நீங்கப் பெறுகின் றனர் என்பதைக் கேள்வியுற்றே வந்தான். அவனுக்கும் ஒரு பெருங்குறை இருந்தது. மக்கட்பேறு இல்லாமல் வருந்தினன் அவன். கதிர்காமத் தலப் பெருமையைக் கேட்டு இங்கே தன் குறை நீங்கப் பெறலா மென்று வந்தான். இங்கே சில நாட்கள் தங்கி ஜயசிங்ககிரி ஸ்வாமி களையும் பணிந்தான். 'முருகா, உன்னுடைய திருவரு ளால் எனக்குக் குழந்தை பிறக்குமானுல் இந்தத் தலத்தில் உன்னுடைய திருப்பணி செய்வதற்கென்றே விட்டுவிடு கிறேன்” என்று வேண்டிக் கொண்டான். பின்பு தன் ஊருக்குப் போனன்.

அப்பால் அவனுக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்குப் பாலசுந்தரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அரசனுக்குத் தான் செய்துகொண்ட பிரார்த் தனே மறந்துபோய் விட்டது. ஆயினும் கதிர்காம வேல னுடைய திருவுள்ளம் அப்பெண்மணியைத் தன் திருத் தொண்டில் ஈடுபடுத்த வேண்டுமென்றிருந்தது. ஆதலின் அரசனுடைய கனவிலே முருகன் எழுந்தருளி அவனது பிரார்த்தனேயை நிறைவேற்றும்படி பணித்தான். செய்து கொண்ட வேண்டுதலயை நிறைவேற்ருவிட்டால் திங்கு உண்டாகும் என்பதையும் அரசன் உணர்ந்தான். இறை வன் கட்டளைப்படியே தன் அழகிய பெண்ணேச் சில தோழி களையும் துணையாகக் கூட்டிக் கதிர்காமத்துக்கு அனுப்பி' ன்ை. அது முதல் பாலசுந்தரி கதிர்காம முருகனுடைய