பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண மடம் Αρ5.

மலேயை (Adam's Peak) அடைந்தார். அது எல்லாச் சமயத்தினரும் வழிபடும் புண்ணியத் தலம். • . - அங்கே சில காள். தங்கியிருந்தபோது மீட்டும் அவருக்குக் கனவின் மூலம் இறைவன் கட்டளே ஒன்று பிறந்தது. பல காலமாகக் காட்டிலிருந்து தவம் புரிந்துவரும் கஜபுரி ஸ்வாமிகளைக் கண்டு கதிர்காமத்துக்கு அழைத்துச் செல்லவேண்டு மென்பதே அக்தக் கட்டளை. சுரராஜபுரி முனிவர் காட்டுக்குள் சென்று தேடினர். ஐம்பது ஆண்டு களாகப் பொறிபுலன்களே அடக்கித் தவம் புரிந்து வந்த கஜபுரியை அவர் தரிசித்தார். காலில் விழுந்து பணித்தார். கண்ணிர் வார கின்று துதித்தார். இறைவன் இட்ட கட்டளையைத் தெரிவித்தார். மீண்டும் மக்கள் நடமாடும் இடத்திலே வந்து வாழ்வதைக் கஜபுரி ஸ்வாமிகள் விரும்ப வில்லே. ஆயினும் இறைவனுடைய ஆணேயை மறுக்க வகையின்றி அவர் சுர ராஜபுரியுடன் கதிர்காமத்தை கோக்கிப் புறப்பட்டார்.

அவர் கதிர்காமத்தில் கல்யாணமடத்தில் வந்து தங்கி ஞர். அந்த மடத்தின் பெருமை அவரால் அதிகமாயிற்று.பல காலமாகக் காட்டுக் கணிகளையும் கிழங்குகளேயும் உண்டு பழகிய அவருக்கு அரிசிச் சோறு ஒத்துக்கொள்ளவில்லை. ஆதவினல் பால்மாத்திரம் உண்டு வந்தார். அதனல் அவரை யாரும் பால்குடி பாபா என்று அழைக்கத் தொடங்

சுர ராஜபுரியும் பால்குடி பாபாவுடன் கல்யாண மடத். திலே தங்கிவிட்டார். பல மக்கள் பால்குடி பாபாவைத் தரிசித்து நன்மை அடைந்தனர். இறைவனுடைய கட் டளையால் அவர் கதிர்காமத்தில் வந்து தங்கியிருந்தாலும் ஏகாந்தத்தின் இனிமையை நுகர்ந்த அவருக்குப் பழையபடி மக்கள் கண்படாத மோனச் சூழலில் சென்று தங்க வேண்டுமென்ற அவா இருந்துகொண்டிருந்தது. அதை

முற்றும் நிறைவேற்றிக்கொள்ள முடியாவிட்டாலும்