பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

连6 - கதிர்காம யாத்திரை

அவ்வப்போது காட்டுக்குச் சென்று சில காலம் இருந்து விட்டு வருவார். கடைசியில் 1898-ஆம் வருஷம் அவர் கொழும்பு நகரம் போயிருந்தார். அங்கேயே அவர் இறைவன் அடிநிழலே எய்தினர். அங்கிருந்து அவருடைய திருமேனியை எடுத்து வந்து கதிர்காமத்தில் சமாதி செய் தார்கள். பால்குடி பாபா சமாதிக்கு இன்றும் பூசை முதலியன நடைபெற்று வருகின்றன.

அவருக்குப்பின் கல்யாண மடத்தில் பல துறவி கள் தலைமை பூண்டனர். இப்போது மலேயாளத்திலிருந்து வந்த ஒருவர் மடாதிபதியாக இருப்பதாகத் தெரிகிறது.

9 பிற செய்திகள்

செல்லக் கதிர்காமம் - கதிர்காமத்திற்கு மூன்று மைல் தூரத்தில் செல்லக்

கதிர்காமம் என்னும் இடம் இருக்கிறது. நான் அங்கே போக முடியவில்லை. அத்தலத்துக்கு அருகிலும் மாணிக்க கங்கை வருகிறதாம். அதன் கரையில் மாணிக்கப் பிள்ளையார் என்ற திருநாமத்தோடு விநாயகர் எழுந்தருளி யிருக்கிரு.ர். அப்பால் செல்லக் கதிர்காமமாகிய மலே இருக்கிற்து. அதைச் சுவாமி மலை என்றும் பழைய கதிர்காமம் என்றும் வழங்குகிருர்கள். ஏறுதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும் என்று சொல்கிருர்கள். இந்த மலையின்மேல் கோயில் ஒன்றும் இல்லை. மேலே சென்று அவ்விடத்தையே முருகன் உறையும் இடமாக வழிபடுவது அன்பர்களுடைய வழக்கம் என்பர். கதிரை மலே, கதிர்காம வெற்பு, கதிர் காம மலை என்று சொல்லும் பெயர்களே உடையது இந்தக் செல்லக் கதிர்காமமே ஆகும். முருகவேளும் வள்ளி iெம் பெருமாட்டியும் ஏகாக்கத்திலிருந்து இன்புற்ற இடம் இத் திருத்தலம் என்று சிலர் சொல்கிருர்கள். செல்லக் கதிர்