பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற செய்திகள் 孕?

காமம் என்ற திருகாமம் இந்த அருமைப் பாட்டை நினேந்து வந்ததுபோலும்.

புகழேந்திப் புலவர் பாட்டு

கதிர்காமத்துக்கு ஒரு சமயம் புகழேந்திப் புலவர் வந்திருந்தார். அப்போது இங்கே தரிசனம் செய்து கொண் டிருக்கையில் ஒரு மயில் பாம்பு ஒன்றைக் கவ்விக்கொண் டிருந்தது. சிறிது நேரத்தில் அதைக் கொத்திக் கிழித்து காசமாக்கிவிடும் என்று தோன்றியது. புகழேந்திப் புலவருக்கு அந்தப் பாம்பினிடம் கருணை பிறந்தது. தமிழ் நாட்டில் அன்பர்கள் காகத்தைக் கொல்ல அஞ்சுவார்கள். நாகப் பாம்பைச் சொப்பனத்தில் கண்டால், முருகனுக்குப் பிரார்த்தனே செய்து கொள்வார்கள். இந்த கினைவு காரண மாகப் புகழேந்திக்கு மயிலால் வருந்திய பாம்பினிடம் இரக்கம் எழுந்தது போலும். அந்த மயிலிடம், 'மயிலே, நீ பாம்பை விட்டுவிடு' என்று விண்ணப்பம் செய்து கொண்டார். அவர் புலவராதலின் நம்மைப்போல வெறும் பேச்சாகவா சொல்வார்? பாட்டாகவே அந்த வேண்டு கோளே விடுத்தார். - - - - கதிர்காம வேலனிடம் மயல் பூண்ட பெண் ஒருத்தி சொல்வதாக அந்தப் பாட்டைப் பாடினர். ' அடடா ! இந்தப் பாம்பை நீ பற்றிக் கொண்டாயே! எனக்கு இதல்ை ஒர் உபகாரம் ஆகவேண்டி யிருக்கிறதே. இறைவனுடைய காதலால் வெம்பும் எனக்கு மாலேக் காலம் வந்தால் பெரிய ஆபத்து சந்திரோதயம் ஆகி விட்டால் சொல்லவே வேண்டாம். போதாக் குறைக்கு என்னைப் பெற்ற தாயும் வளர்த்தவர்களும் என்னே மிரட்டும் மிரட்டல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவர் களுக்கு முன்னே என்னே வெதுப்பி வருத்தும் சந்திரன் உதயமானல், இந்தப் பாம்பைக் கொண்டு அந்தப் பாழும் திங்களே விழுங்கிவிடச் சொல்லலாம் என்றல்லவோ