பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் அவருடைய சொந்தக் குழந்தைகள் அவரிடம் கதை கேட்டதும் இல்லை; அவருடைய கதைகளைப் படித்ததும் இல்லை. காரணம், அவருக்குக் குழந்தையே கிடையாது! ஆமாம், அவ க்கு மனைவியும் இல்லை; மக்களும் இல்லை. அவர்தான் திருமணமே செய்து கொள்ள வில் யே !

ஆண்டர்சன், டென்மார்க் தேசத்திலுள்ள ஓடென்ஸ் என்ற ஊரில் 1805-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய அப்பா செருப்புத் தைப்பவர்; அம்மா துணி வெளுப்பவள். தங்களுடைய பிள்ளை பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகப் போய்ப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அப்பாவும் அம்மாவும் ஆசைப் பட்டார்கள். ஆனால், ஆண்டர்சனுக்குப் படிப்பில் கவனம் செல்லவே இல்லை. அவர் எப்போதும் ஏதாவது கனவு கண்டு கொண்டே யிருப்பார். இதனால், அவர் பள்ளிப் படிப்புக்கு விரைவில் முழுக்குப் போடவேண்டிய தாயிற்று!

ஆண்டர்சனுக்கு, அவருடைய அப்பா ஒரு பொம்மை நாடக மேடையைச் செய்து கொடுத் திருந்தார். ஆண்டர்சன் பல பொம்மைகளை நடிகர்கள் போல் அந்த மேடையில் நிற்க வைப்பார். சும்மா நிற்கவைக்க மாட்டார்; தையற் கடையிலிருந்து பொறுக்கி வந்த துண்டுத் துணிகளைக் கொண்டு அவற்றிற்கு உடை தைத்துப் போட்டு, நிற்க வைப்பார். அந்த நடிகர்களுக்கு நாடகம்

11