பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டாமா? நாடகத்தையும் ஆண்டர்சனே தயார் செய்வார். பல வகையான நாடகங்களை அவர் கற்பனை செய்வார். நாடகத்திற்கு வேண்டிய கதை, வசனம், பாட்டு எல்லாவற்றையும் அவரே எழுதுவார். அந்த நடிகர்களுக்குப் பதிலாக அவரே பேசியும் பாடியும் உணர்ச்சி ததும்ப நடிப்பார். இதனால், அவரது கற்பனை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது.

ஆண்டர்சனின் அப்பா செருப்புத் தைப்பவராயிருந்தாலும், ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படித்துக்கொண்டேயிருப்பார். சில சமயங்களில் ஆண்டர்சனை அருகில் வைத்துக் கொண்டு, சில நல்ல நல்ல கதைகளையும், நாடகங்களையும் படித்துக் காட்டுவார். ஆண்டர்சன் நாடகத்திலுள்ள வசனத்தையெல்லாம் மனப்பாடம் செய்து விடுவார். அப்படி அவர் மனப்பாடம் செய்ததைத் தெருவில் கடக்கும்போதெல்லாம் சொல்லிப் பார்ப்பார். இதனால், தெருவில் போவோர் வருவோரெல்லாம் இவன் என்ன, தனக்குத் தானே பேசிக் கொள்ளுகிறானே! பைத்தியமோ!' என்று நினைப் பார்கள்.

ஆண்டர்சனுக்கு வயது 14 ஆயிற்று. இதற்குள் அவருடைய அப்பா காலமாகிவிட்டார். “இனிமேல் இந்த ஊரில் இருந்தால் சரிப்படாது. தலை நகருக்குப் போக வேண்டும்” என்று ஆண்டர்சன் ஆசைப்பட்டார். உடனே தாயிடம் சென்றார், டென்மார்க்கின் தலைநகராகிய கோபன்

12