பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹேகனுக்குப் போகவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார். “ அங்கே போய் என்ன செய்வாய்?” என்று கேட்டாள் ஆண்டர்சனின் அம்மா.

“புகழ் சம்பாதிக்கப் போகிறேன்” என்றார் ஆண்டர்சன்.

உடனே அம்மா சிரித்தாள். “எல்லோரும் பொருள் சம்பாதிக்கப் போவார்கள். நீ புகழ் சம்பாதிக்கப் போகிறாயா?” என்று கேட்டாள்.

“ஆமாம் அம்மா. நிச்சயம் புகழ் சம்பாதிப்பேன். இன்று என்னைப் பார்த்துக் கேலி செய்கிறார்களே, அவர்களெல்லாம் அன்று என்னைப் பார்த்து வியப்படையப் போகிறார்கள். இது நிச்சயம் அம்மா. இப்போது எனக்கு அனுமதி கொடு அம்மா” என்று கெஞ்சினார்.

அம்மா முதலில் சம்மதிக்கவில்லை. ஆண்டர்சன் தொடர்ந்து வற்புறுத்தவே, அம்மா ஒருநாள், “சரி, போய் வா” என்று அனுமதி கொடுத்துவிட்டாள்.

ஆண்டர்சன் தலைநகருக்குப் போவதற்குப் பணம் வேண்டுமே, என்ன செய்வது? அவர் கையிலே கிடைக்கும் சில்லறைக் காசுகளை யெல்லாம் ஒரு களிமண் உண்டிப் பெட்டிக்குள் போட்டுவைப்பார். அந்தப் பெட்டியை உடைத்து உள்ளே யிருந்த காசுகளை யெல்லாம் எண்ணிப்

13