பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்த்தார். பத்து ரிக்ஸ் டாலர் (சுமார் 20 ரூபாய்) இருந்தது. அந்தப் பணத்துடன் புறப்பட்டு விட்டார்.

ஆண்டர்சனுடன் ஓர் அம்மையாரும் பிரயாணம் செய்தார். அவர், ‘தன்னந்‌ தனியாக ஒரு சிறுவன் இருக்கிறானே’ என்று நினைத்து, “தம்பி,நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார். “ தலை நகருக்குப் புகழ் சம்பாதிக்கப் போகிறேன்” என்றார் ஆண்டர்சன்.

"எப்படிப் புகழ் சம்பாதிப்பாய்!" என்று கேட்டார் அந்த அம்மையார்.

“நடிகனாவேன். மிக மிகப் பெரிய நடிகனவேன். கூடிய சீக்கிரத்தில் புகழ் பெற்றுவிடுவேன்” என்று துடுக்காகப் பதிலளித்தார் ஆண்டர்சன். ஆண்டர்சனின் மன உறுதியைப் பாராட்டினார் அந்த அம்மையார்.

ஊரைவிட்டுப் புறப்படும் போது, அங்கிருந்த ஓர் அச்சகத்தாரிடமிருந்து ஆண்டர்சன் ஒரு கடிதம் வாங்கி வந்தார். கோபன் ஹேகனிலுள்ள புகழ் பெற்ற ஒரு நடிகையிடம் கொடுக்க வேண்டிய சிபார்சுக் கடிதமே அது. ஆண்டர்சன் நேராக அந்த நடிகையிடம் சென்றார். கடிதத்தைக் கொடுத்தார். கிழிந்த உடையுடன் வந்த ஆண்டர்சனப் பார்த்ததும் அவள், “உனக்கு நன்றாக நடிக்கத் தெரியுமா?” என்று கேட்டாள்.

14