பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“நீங்கள் எப்படியாவது எனக்கு உதவிசெய்ய வேண்டும்” என்று ஆண்டர்சன் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

“இப்போது ஒன்றும் நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று அவள் கூறிவிட்டாள். பாவம், ஆண்டர்சன் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டார்.

கையிலுள்ள பணமெல்லாம் கரைந்து விட்டது. ஆண்டர்சனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஊருக்குத் திரும்பி விடலாமா என்றுகூடத் தோன்றியது. “சேச்சே, புகழ் சம் பாதிக்காமல் திரும்புவதா ? கூடாது. கூடவே கூடாது” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார்.

ஆண்டர்சனுடைய குரல் மிகவும் இனிமை யாக இருக்கும். “தம்பி, உன் குரல் நன்றாயிருக் கிறது முயற்சி செய்தால் நல்ல பாடகனாகலாம்”எ ன்று சிலர் யோசனை கூறினார்கள்.

ஒருநாள் அந்த நகரில் இருந்த புகழ்பெற்ற ஒரு பாடகர் வீட்டுக்கு ஆண்டர்சன் சென்றார். அவரை நேரில் பார்த்து, அவரிடம் தம்முடைய விருப்பத் தைக் கூறினார். உடனே, அவர் ஆண்டர்சனைப் பாடச் சொன்னார். ஆண்டர்சன் இனிமையாகப் பாடினார். அதைக் கேட்ட அவர், “தம்பி, நீ என் வீட்டிலே இருக்கலாம். சாப்பாடு துணிமணியெல்லாம் நான் தருவேன்” என்றார். ஆண்டர்சனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. விரைவில் புகழ் சம்பா-

16