பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திலே கோலாகலமான வரவேற்பு நடந்தது. மேயரும், நகரசபை அங்கத்தினர்களும் கைகுலுக்கி அவரை வரவேறார்கள். மேயர் ஆண்டர்சனை வரவேற்றுப் பேசினார்ர். மக்களெல்லாம் மண்டபமே அதிரும்படி கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்கு வாழ்த்துத் தந்திகள் வந்து குவிந்தன. பல நாட்டுக் குழந்தைகளும் அவருக்குப் பரிசுகள் அனுப்பியிருந்தார்கள்.

அன்று இரவு அவரை கெளரவிப்பதற்காக ஒரு பெரிய விருந்து நடந்தது. விருந்து முடிந்ததும், அவரை விருந்து மண்டபத்தின் ஒரு ஜன்னல் அருகே அழைத்துச் சென்றார்கள். ஆண்டர்சன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். எங்கே பார்த்தாலும் பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆண்டர்சனுக்கு மரியாதை செய்யவே அப்படி விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். விளக்குகளின் ஒளியைக் கண்டு அவர் மனம் குளிர்ந்தார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு யாரைப் பார்த்துக் கேலி செய்தார்களோ, அவருக்குத்தான் இப்படி ராஜ மரியாதை நடந்தது!

ஆண்டர்சனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்தது. அவரது கதைகள் உலகெங்கும் பரவின. இதுவரை சுமார் 120 மொழிகளில் அவரது

21