பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைகள் வெளிவந்திருக்கின்றன. வண்ண ஓவியங்களுடன் அழகழகான பதிப்புக்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன; இன்னும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன!

ஓடென்ஸ் நகரிலே ஆண்டர்சன் பிறந்த வீடு இப்போது ஒரு கலைக்கூடமாக விளங்குகிறது. ஆண்டர்சனின் கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், இன்னும் அவர் சம்பந்தப்பட்ட புகைப் படங்கள், சித்திரங்கள் முதலியவற்றையெல்லாம் திரட்டி அங்கு ஒரு காட்சியாக வைத்திருக்கி றார்கள். அவற்றுடன், இதுவரை வெளிவந்துள்ள ஆண்டர்சனின் கதைப் புத்தகங்களையும் ஆண்டர்சனைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்த நகருக்குச் செல்வோர் அங்கே சென்று அவற்றைப் பார்க்காமல் திரும்ப மாட்டார்கள் !

22