பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகரத்தின் மத்தியிலே ஒரு மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தில் அடிக்கடி ஏதேனும் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஒருநாள், ஒரு கோமாளி அந்த மண்டபத்தில் பற்பல வித்தைகளைச் செய்து காட்டிக்கொண்டிருந்தான். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“இப்போது நான் பண்றியைப் போல் கத்தப் போகிறேன்” என்று கூறிவிட்டு, அந்தக் கோமாளி கீழே குனிந்தான். ‘ஈக், பீக், சக், பீக்’ என்று கத்தினான்.

அவன் கத்தியதைக் கேட்டதும், சிலர், “அடடா! அசல் பன்றி மாதிரியே கத்துகிறானே!”

23