பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியானவன் - இந்தக் கூச்சலுக்கெல்லாம் பயந்துவிடவில்லை. உள்ளே போகவும் இல்லை. திரும்பத் திரும்ப அதே மாதிரி சப்தம் கேட்கவே, சபையோர் ஒரேயடியாகக் கூச்சலிட்டனர்.

கடைசியாக, குடியானவன் மேலே போர்த்தி பிருந்த போர்வையை எடுத்துக் கீழே எறிந்தான். அப்போது அவனுடைய கக்கத்திலே ஒரு சிறிய பன்றி இருந்தது. அந்தப் பன்றியைத் தூக்கி சடையோரிடம் காட்டினான்.

“சபையோரே, இவ்வளவு நேரமாகக் கத்தியது நானல்ல; இதோ இந்தப் பன்றிதான்! இதன் காதைப் பிடித்துத் திருகித் திருகித்தான், - நான் இதைக் கத்தும்படி செய்தேன். இந்த உண்மைப் பன்றியைக் காட்டிலும், உங்களுடைய கோமாளி எப்படித்தான் நன்றாகக் கத்துவாரோ” என்று கேட்டான்.

சபையோருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லோரும் தலை குனிந்தார்கள். உண்மை எது, போலி எது என்-