பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரும்பாலான கதைகள் மிருகக் கதைகளாயிருக்கும்; அல்லது பறவைக் கதைகளாயிருக்கும். மேலே கடறப்பட்டது போல், சிறிது நீளமாகவும், மனிதர்களைப் பற்றியும் அவர் சொன்ன கதைகள் மிகவும் குறைவுதான்.

இப்போது பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் நாம் பல கதைகளைப் படிக்கிறோம். ஆனால், ஈசாப் காலத்தில் பத்திரிகையும் கிடையாது; புத்தகமும் கிடையாது. அவர் இந்தக் கதைகளை எதிலுமே எழுதி வைக்கவில்லை.

அவர் தெருவிலே போய்க்கொண்டிருப்பார். அப்போது இருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். உடனே, சண்டை போடாதபடி அவர்களைத் தடுப்பார். அங்கேயே அழகான குட்டிக் கதை ஒன்றையும் கூறுவார். கதையைக் கேட்டதும், சண்டை போட்ட இருவருடைய கோபமும் பறந்துவிடும்; சண்டை போட்டது தவறு என்று அவர்கள் உணருவார்கள்.

இதேபோல் அவர், கதைகளைக் கூறிக் கூறி, நாட்டில் கடந்த கலகங்கள், சண்டைகள் முதலியவற்றை யெல்லாம் அடக்கியிருக்கிறார். அரசர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பல விரோதங்களைத் தீர்த்து வைத்திருக்கிறார். அவ்வப்போது அவர் கூறி வந்த கதைகளை அவர் காலத்தில் இருந்தவர்களும், பின்னால் வந்தவர்களும், வாய் மொழியாகக் கூறி வந்தார்கள்.

அவர் இந்தக் கதைகளை எந்த மொழியில்

28