பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூறினார். தமிழிலா? இல்லை. ஆங்கிலத்திலா? அதுவும் இல்லை. கிரேக்க மொழியில்தான் கூறி வந்தார்; ஆம், அவருடைய தாய்மொழி அதுதான். அவருடைய தாய்காடும் கிரேக்க நாடுதான்!

கிரேக்க நாட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 260 ஆண்டுகளுக்கு முன்னர் ஈசாப் பிறந்தார் எனத் தெரிகிறது. ஆனால், அவர் கிரேக்க நாட்டில் எந்த ஊரில் பிறந்தார் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. கிரேக்க மகாகவி ஹோமரைப் போலவே, ஈசாப் பிறந்த ஊரும் இன்னும் ஆராய்ச்சிக்கு உரியதாகவே இருக்கிறது. எங்கள் ஊரில்தான் பிறந்தார். ‘எங்கள் ஊரில்தான் பிறந்தார்’ என்று இப்போது ஆறு ஊர்க்காரர்கள் பெருமையாகக் கூறி வருகிறார்கள். ஒருவர் எப்படி ஆறு ஊர்களிலும் பிறந்திருக்க முடியும்? சில ஆராய்ச்சியாளர்கள், ‘சாமோஸ்’ என்ற ஊரில் தான் ஈசாப் பிறந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஈசாப் ஆரம்பத்தில் ஓர் அடிமையாகவே இருந்தார். ஆயினும் அதிக காலம் அப்படி இருக்கவில்லை. அவரது கெட்டிக்காரத்தனத்தையும், குட்டிக் கதை சொல்லும் திறத்தையும் கண்டு அவருடைய எஜமானர் அவருக்கு விடுதலை அளித்து விட்டார்.

மனிதர்களுக்கு மனிதர்களைப் பற்றிய கதை களையே கூறினால், அவர்கள் கோபம் அடையலாம்

29