பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டார்கள். ஈசாப் வைத்திருந்த கூடையிலிருந்த ரொட்டிகளை வேளா வேளைக்கு அவர்கள் எடுத்துத் தின்று வந்ததால், கனம் குறைந்து கொண்டே வந்தது. செல்ல வேண்டிய ஊரை நெருங்கும் போது ஈசாப் வெறும் கூடையுடன் ஆனந்தமாக கடந்து சென்றார், ஆனால் மற்ற வர்கள் அப்படிச் செல்லவில்லை. போகப் போக, சுமையைத் தூக்க முடியாமல் அவர்கள் அயர்ந்து விட்டார்கள்,

அப்போதுதான் மற்றவர்களுக்கு ஈசாப்பின் புத்திசாலித்தனம் தெரிந்தது!

ஈசாப் இருந்த ஊரின் நடுவே ஒரு குளம் இருந்தது. எல்லோரும் அதில்தான் குளிப்பார்கள்.

ஒருநாள் ஈசாப்பின் எஜமானர், ஈசாப்பை அழைத்து, “நான் குளிக்க வேண்டும். குளத்திலே கூட்டம் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்து வா” என்று உத்தரவிட்டார். -

ஈசாப் உடனே சென்று பார்த்தார். அந்தக் குளத்திற்குச் செல்லும் வழியிலே குறுக்காக ஒரு பெரிய கல் கிடங்தது, குளிக்கச் சென்றவர்களில் சிலர் அதைத் தாண்டிக் கொண்டு சென்றார்கள்; சிலர் கல் தடுக்கிக் கீழே விழுந்து, பிறகு எழுந்து சென்றார்கள். ஆனால், ஒருவர்கூட அதை அப்புறப் படுத்தவில்லை. -

ஈசாப் இந்தக் காட்சியைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு வந்த

34