பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார் ஒருவர். அவர் அந்தக் கல்லைத் துக்கி ஒரமா கப் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார்.

ஈசாப் உடனே தம் எஜமானரிடம் சென்று, "குளத்தில் ஒரே ஒரு மனிதர்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்" என்று சொன்னார்.

"சரி, நான் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்” என்று கூறி, எஜமானர் புறப்பட்டார்.

குளத்தங்கரைக்குச் சென்றதும், அங்கு ஏராளமானவர்கள் குளித்துக் கொண்டிருப்பதை எஜமானர் கண்டார். உடனே அவருக்கு ஈசாப்பின் மீது கோபம் கோபமாக வந்தது. வேகமாக வீட்டுக்குத் திரும்பினார். "ஏ ஈசாப், உனக்கு என்ன, கண் பொட்டையா ? குளத்தில் எத்தனை பேர் குளிக்கிறார்கள் ? ஒரே ஒருவர்தான் குளிக்கிறார் என்றாயே!” என்று சீறினர்.

"ஆமாம் எஜமானரே. அவர் ஒருவர்தான் மனிதர் : வழியிலே கிடந்த கல்லை. அப்புறப் படுத்தி, மற்றவர்களை விழாமல் காப்பாற்றிய அவர் ஒருவர்தான் மனிதர்"என்றார் ஈசாப்.

தடுக்கி விழ வைக்கும் கல்லைக் கண்டும், பேசாமல் சென்று குளித்துக் கொண்டிருந்தார்களே, அவர்களை மனிதர்கள் என்று சொல்ல விரும்பவில்லை ஈசாப் ! இதையறிந்த எஜமானர் ஈசாப்பின் உயர்ந்த எண்ணத்தை மிகவும் பாராட்டினார்.

35