பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யும் தங்களிடமே கொடுத்துவிடும்படி நிர்ப்பதப்படுத்தினார்கள். ஈசாப் எவ்வளவோ சமாதானம் கூறிப் பார்த்தார்; அவர்கள் கேட்கவில்லை. 'பொன் முட்டையிடும் வாத்து கதையைக்கூட அப்போதுதான் கூறினாறாம். என்ன சொல்லியும் அவர்கள் இணங்கவில்லை. கலகம் செய்யத் தொடங்கினர்கள்.

வேறு வழியின்றி, ஈசாப் தங்கக் காசுகளை அந்த அரசனுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் கோபம் கொண்ட அந்தப் பேராசைக்காரர்கள் ஈசாப்பைப் பிடித்துச் செங்குத்தான ஒரு மலைக்குக் கொண்டு சென்றார்கள். மலையின் உச்சியிலிருந்து அவரைக் கீழே உருட்டிவிட்டார்கள் அந்தப் பாவிகள்! உலகத்துக்காக உழைத்த உத்தமரின் உயிர் பிரிந்துவிட்டது !

ஈசாப்பின் கருத்துக்கள் சாகா வரம் பெற்றவை. அவரது கதைகள் இக்காலத்துக்கு மட்டுமல்ல; எக்காலத்துக்கும் பயன்தரக்கூடியவை.620-3 37