பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





ஓர் ஊரில் ஒரு கிளி இருந்தது. எப்போது பார்த்தாலும், அது பழங்களைத் தின்று கொண்டும், 'கீச்கீச்' என்று கத்திக் கொண்டும் திரியும்.

அந்தக் கிளியைப் பார்த்தார் அங்த ஊர் அரசர். சேச்சே, இந்தக் கிளியை இப்படியே விட்டு வைத்தால் ஆபத்து கொஞ்ச நாளில் பழங்களுக்கே பஞ்சம் வந்துவிடும்! இதற்கு ஏதாவது படிப்புச் சொல்லிக் கொடுத்து வேறு வழியில் திருப்பவேண்டும்’ என்று நினைத்தார். உடனே மந்திரிகளை அழைத்தார். இந்தக் கிளி மிகவும் மக்காக இருக்கிறது. இதற்குப் படிப்புக் கற்றுக் கொடுக்க இப்போதே ஏற்பாடு செய்யுங்கள்' என்று உத்தரவிட்டார்.

38