பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

" இல்லை", "இல்லை” என்ற பதில் தான் வங்தது.

"அப்படியா ? உடனே அந்தக் கிளியைக் கொண்டு வாருங்கள், பார்க்கலாம்" என்றார் அரசர்.

கிளி கொண்டுவரப்பட்டது. அப்போது அது ஆடவில்லை; அசையவில்லை. அதற்கு மூச்சு இருந்தால் அல்லவா ஆடவோ அசையவோ செய்யும் ? பாவம், வயிற்றுக்குள் அவ்வளவு ஏடுகளையும் திணித்த பிறகு அது எப்படி உயிரோடிருக்கும் ?

-இந்தக் கதையை முதல் முதலாகக் கேட்ட வங்காளக் குழந்தைகள் அரசனுடைய முட்டாள் தனத்தை நினைத்து நினைத்துச் சிரித்தார்கள். இது அச்சாகி வெளிவந்தவுடன் குழங்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் படித்துப் படித்துச் சிரித்தார்கள்.

ஏற்கெனவே இந்தக் கதை நம் நாட்டுக் குழங்தைகளுக்குத் தெரியுமோ, தெரியாதோ! ஆனாலும், இதைச் சொன்னவர் பெயர் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். இதில் ஐயமே இல்லை அவர் இயற்றிய ஒரு பாடலை ஒவ்வொரு நாளும் நம் தேசத்திலுள்ள கோடானு கோடி குழந்தைகள் உணர்ச்சியோடு பாடுகிறார்கள். 'ஜன கண மன அதிகாயக ஜயஹே' என்ற பாடலைப் பாடாத இந்தியக் குழந்தை உண்டா ? அதுதான் நமது தேசீய கீதமாக எங்கும் ஒலிக்கிறதே !

41