பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரசர் தாகூர்தான் 'ஜன கண மன' இயற்றியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 'அவர்தாம் பாடம் கேட்ட' கிளி என்ற கதையையும் சொன்னவர் !

தாகூர், அவருடைய அப்பா அம்மாவிற்குப் பதினான்காவது குழங்தையாகப் பிறந்தார். கடைசிக் குழந்தையும் அவர்தான்.

சிறுவயதில் கதை கேட்பதில் அவருக்கு அளவில்லாத ஆசை. அம்மாவை அவர் தொங்தரவு செய்யும் போதெல்லாம், "சித்தி, ரவியின் தொந்தரவு பொறுக்க முடியவில்லை. இவனுக்கு ஏதாவது கதை சொல்லேன்" என்று அவருடைய பாட்டியிடம் அம்மா சொல்லுவாள். உடனே பாட்டி, வெளி வராந்தாவில் உட்கார்ந்து தாகூருக்குக் கதை சொல்லத் தொடங்கிவிடுவாள். பாட்டியிடம் கதை கேட்டுக் கேட்டு, அவருக்கும் கதை சொல்ல வேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. ஆனால், எப்படிச் சொல்லுவது ?

தாகூர் வீட்டு வராந்தாவில் ஒரு பல்லக்கு இருந்தது. அது பாட்டி காலத்துப் பல்லக்கு வர்ணமெல்லாம் மங்கி, உட்காரும் இடமெல்லாம் கிழிந்து கவனிப்பாரில்லாமல் கிடந்தது. தாகூர் ஓடிப்போய் அந்தப் பல்லக்கில் அடிக்கடி உட்கார்ந்து கொள்வார். நகராத அந்தப் பல்லக்கில் அவர் உட்கார்ந்ததும், அது நகர ஆரம்பித்துவிடும். 'விர்’ ரென்று வானத்தில் பறக்கும். திடீரென்று ஒரு

42