பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீவிலே போய் இறங்கும். அங்கிருந்து அழகான ஒர் ஊருக்குள்ளே புகுந்துவிடும். போகும் வழியிலெல்லாம் அவர் பல வீரதீரச் செயல்களைச் செய்து கொண்டே போவார். எல்லாம் கற்பனையில்தான் !

நாள் ஆக ஆக அவருடைய கற்பனை வளர்ந்தது. அருமையான கவிதைகளையும், கதைகளையும் எழுத அந்தக் கற்பனை அவருக்கு உதவியது.

தாகூர் பள்ளிக்கூடத்தில் போய்ச் சேர்ந்ததும், பாடப் புத்தகத்திலிருந்த ஒரு பாட்டை அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ஜால் படே, பத்தா கடே' என்று தொடங்கும் அந்தப் பாட்டு. 'சொட்டியது நீர்; சிலிர்த்தன இலைகள்' என்பது தான் அதன் பொருள். தாகூருக்கு அதைத் திரும்பத் திரும்பப் பாடுவதிலே ஓர் ஆனந்தம். காரணம், அந்தப் பாடலில் உள்ள இனிய ஓசையே!

தாகூர் வீட்டிலே ஒரு கணக்குப்பிள்ளை இருந்தார். அவர் பெயர் கைலாசம். அவர் ஒரு நாள் வேடிக்கையாக ஒரு பாடல் எழுதினார். அதைத் தாகூரிடம் பாடிக் காட்டினார். அந்தப் பாட்டின் கதாநாயகன் யார் தெரியுமா ? தாகூர்தான்! ஆம் தாகூரைக் கதாநாயகனாக வைத்தே அவர் அப் பாடலை எழுதியிருந்தார். அத்துடன், தாகூருக்கு ஏற்ற ஒரு கதாநாயகியையும் அந்தப் பாட்டிலே வரச் செய்தார். அவளுடைய அழகையும் ஆடை அலங்காரத்தையும் பற்றி மிகவும் நன்றாக அவர் வர்ணித்திருந்தார். தாகூருக்கு அந்தப் பாட்டிலே

43