பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மிகவும் பிடித்தது அதிலுள்ள எதுகை, மோனை, சந்தம்-இவைகள்தாம். -

தாகூருக்கு அப்போது எட்டு வயது இருக்கும். அவருடைய உறவினர் ஒருவர் தாகூரிடம், "ரவி, நன்றாகப் பாடுகிறாயே, நீயே ஒரு பாட்டுக் கட்டிப் பாரேன்” என்றார்.

தாகூர் பாட்டு எழுதுவது மிகவும் சிரமம் என்று நினைத்தார். ஆனாலும், 'எழுதித்தான் பார்ப்போமே' என்று நினைத்து, எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு சிறு பாட்டை எழுதி முடித்தார்; தாமரையைப் பற்றியதே அந்தப் பாட்டு.

அதிலிருந்து தாகூருக்குப் பாட்டு எழுத வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அவ்வப்போது ஒரு சில பாடல்களை எழுதி வந்தார். ஆனாலும், அவர் பாட்டு எழுதுவார் என்பது அவருடைய பதினேராவது வயதில்தான் பலருக்கும் தெரிந்தது.

தாகூரின் பள்ளித்தலைவர் கோவிந்தபாபு ஒரு நாள் தாகூரை அழைத்து, ரவி, நீ பாட்டு எழுது வாயாமே !’ என்று கேட்டார். தாகூர் தயக்கத்துடன் "ஆமாம்” என்றார்.

"சரி, நீ நாளை ஒரு பாட்டு எழுதிக் கொண்டு வா' என்று சொன்னார்.

தாகூர் மறுநாள் ஒரு பாடலை எழுதிக் கொண்டு போனார். கோவிந்தபாபு அதைப் படித்

44