பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தாகூரை அழைத்துக் கொண்டுபோய், மாணவர்களுக்கு முன்னால் பாடிக் காட்டச் சொன்னார். ஆனால் பலர், "இந்தப் பாட்டை ரவி இயற்றியிருக்க மாட்டான்; யாரோ எழுதிய பாட்டை இவன் திருடி, தான் எழுதியதாகச் சொல்லுகிறான்!” என்றார்கள், ஆனால், அவர்கள் சந்தேகம் விரைவில் தீர்ந்துவிட்டது. எந்தப் பொருளைக் கொடுத்தாலும், அதை வைத்துக் கவிதை எழுதும் திறமை அவருக்கு இருப்பதை அவர்கள் நேரிலே உணர்ந்தார்கள்.

தாகூர் அப்போது எழுதிய பாடலை ஒருவர் மிகவும் இனிமையான குரலில் தாகூரின் அப்பாவிடம் பாடிக் காட்டினார். அதைக் கேட்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தாகூர் இளம் வயதிலே, ஞானாங்குரம்' என்ற மாதப் பத்திரிகையில் தொடர்ந்து கவிதைகளே எழுதி வந்தார். ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதினார். பிறகு, தமது அண்ணை ஆரம்பித்த பாரதி' என்ற பத்திரிகையிலும் அடிக்கடி எழுதி வந்தார்.

அப்போது ஒரு வேடிக்கை நடந்தது.

தாகூர் வைஷ்ணவப் பாடல்கள் பலவற்றைக் கேட்டார். அவற்றைக் கேட்கக் கேட்க, அவற்றைப் போலவே பல பக்திப் பாடல்களை எழுத வேண்டுமென்ற ஆசை அவருக்குத் தோன்றியது.

45