பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பாடல்களை அறிஞர்களெல்லாம் படித்தனர்; மிகவும் பாராட்டினர். ஆனால், அவற்றை பானு சிங்கா என்பவர் எழுதியதாகவே அனைவரும் நினைத்தார்கள்.

ஜெர்மனியில் படித்துக் கொண்டிருந்த நிஷிகாந்த் சட்டர்ஜி என்பவர் அந்தப் பாடல்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி, டாக்டர் பட்டம் கூடப் பெற்றுவிட்டார் !

தாகூர் சிறுவராயிருக்கும் பொழுது இராமாயணத்தை எடுத்து வைத்துக்கொண்டு அழகாகப் பாடுவார். மிகவும் துக்கமான இடங்களைப் பாடும் போது, அவருக்குக் கண்ணீர் வந்துவிடும். எத்தனையோ தடவைகள் அவர் அப்படிக் கண்ணீர் விட்டிருக்கிறார். அவர் கண்ணீர் விடுவதைக் காண அவருடைய பாட்டிக்குப் பொறுக்காது. உடனே அவர் கையிலிருக்கும் புத்தகத்தைப் பறித்து அறைக்குள் கொண்டு போய் வைத்துவிடுவாள்.

தாகூரையும் அவருடைய சகோதரர்களையும் சிறுவயதிலே அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமன்று. சிறுவர்களை யெல்லாம் வேலைக்காரர்கள் மேற்பார்வையில் விட்டுவிட்டுப் பெரியவர்கள் வெளியே சென்று விடுவார்கள். அப்போது, அந்த வேலைக்காரர்கள் வைத்ததுதான் சட்டம் !

சியாமா என்று ஒரு வேலைக்காரன் இருந்தான். அவன் தாகூர் இருக்கும் இடத்தைச் சுற்றி

47