பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் சொல்விய ஒரு கதையுடன் தொடங்குகிறது. அவர்களது கதைகளைப் போலவே, அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் சுவையாக இருக்கின்றன.

'இவையனைத்தையும் ஒரே புத்தகமாக வெளியிடுவதைவிட, மூன்று புத்தகங்களாக வெளியிட்டால் குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் எளிதாயிருக்குமே' என்று கருதினார் தமிழ் நிலைய அதிபர் திரு. வெ. சுப. கடேசன் அவர்கள். அவர் விருப்பப்படியே புத்தகத்துக்கு நான்கு கதாசிரியர்கள் வீதம் வெளியிட இசைந்தேன். இப் புத்தகத்தைத் தொடர்ந்து இரு புத்தகங்கள் வெளி வருகின்றன.

கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் குழந்தைகளுக்காகப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டுப் பல பதிப்பகத்தாருக்கும் வழிகாட்டியாயுள்ள தமிழ் நிலைய அதிபர் அவர்களுக்கும், என்னை அடிக்கடி தூண்டி இந்தக் கட்டுரைகளை எழுதச்செய்த 'கங்கை' ஆசிரியர் திரு. பகீரதன் அவர்களுக்கும், நல்ல முறையில் படங்கள் வரைந்து தந்த ஒவியர் திரு. சாகர் அவர் களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

நல்லநல்ல கதைகளைக் குழந்தைகளுக்குக் கூறி அவர்களுக்கு இன்பம் ஊட்டி, தாமும் இன்பம் பெற்ற அப்பெரியார்களைப் பற்றிக் கூறுவதிலே நானும் இன்பம் பெறுகின்றேன். குழந்தைகளும் இவற்றைப் படித்து இன்பம் பெற வேண்டுமென ஆசைப்படுகின்றேன்.

சென்னை - 17 அழ. வள்ளியப்பா 30ー5ー61