பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சென்றார். அவர் போன அதே சமயம் புகழ்பெற்ற வங்காள நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜியும் வந்தார். அவருக்கு மாலை போட்டு மரியாதையுடன் வரவேற்பதற்காக ரமேச சந்திரர் ஒரு மாலையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் வந்தார். பங்கிம் சந்திரர் தமக்குப் போடுவதற்காகக் கொண்டுவந்த மாலையைக் கையிலே வாங்கி, அருகில் நின்று கொண்டிருந்த தாகூர் கழுத்திலே போட்டுவிட்டு, “ரமேஷ், ரவீந்திரனுக்குத்தான் இந்த மாலை சேர வேண்டும். நீங்கள் ரவீந்திரனின் 'மலைப் பாக்கள்’ படித்திருக்கிறீர்களோ ?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டார். பங்கிம் சந்திரர் போன்ற ஒரு பேரறிஞரின் பாராட்டுக் கிடைத்ததை நினைத்து தாகூர் பூரிப்படைந்தார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ரவீந்திரரை வியப்புடன் பார்த்தார்கள்.

தாகூருக்குப் பள்ளிப் படிப்பு என்றாலே பாகற்காயாகக் கசந்தது! இதற்குத் தகுந்த காரணம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைதான் அவருக்குச் சிறிது ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களிலெல்லாம் விடிந்தது முதல் விளக்கு வைத்த பிறகுகூடப் படிப்பு அவரை விடுவதில்லை. எந்நேரமும் படிப்பு, படிப்பு, படிப்புத்தான் !

“எத்தனை பேரோ காய்ச்சல், குளிர் என்று பள்ளிக்கூடம் வராமல் இருக்கிறார்களே ! நமக்கும் அப்படி ஒரு காய்ச்சல் வரக்கூடாதா?’ என்று தாகூர் அக்காலத்தில் நினைப்பாராம். குளிர் காலத்-

49