பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தில் திறந்த வெளியில் படுத்துத் தூங்குவாராம். தண்ணீரில் இறங்கி வெகு கேரம் ஆட்டம் போடு வாராம். என்ன செய்தும் அவரை எவ்வித நோயும் அணுகவில்லை !

பள்ளிக்கூடம் ஒரு சிறைச் சாலையாகவே அப்போது அவருக்குத் தோன்றியது. 'குழந்தைகளுக்கு நல்ல முறையில் அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் எப்படிக் கல்வி அளிக்கலாம்’ என்று பிற்காலத்தில் அவரைச் சிந்தனை செய்யத் தூண்டியதே இந்த அனுபவம்தான். அந்தச் சிந்தனையில் தோன்றியதுதான் 'சாந்தி நிகேதனம்’ என்ற கல்விக் கூடம்.

ஐந்து பிள்ளைகளுடன் ஆரம்பமான அந்தக் கல்வி நிலையம் இன்று 'விஸ்வ பாரதி' என்னும் பெயரில் உலகம் புகழும் பல்கலைக் கழகமாக விளங்குகிறது.

ஆரம்ப காலத்தில் தாகூரும் அவர் மனைவி மிருணாளினி தேவியாரும் அந்தக் கல்வி நிலையத்தை கடத்துவதற்கு எவ்வளவோ பாடுபட்டார்கள். அப்போது பண நெருக்கடி அதிகம். மிருணாளினி தேவியார் தம்முடைய நகைகளை யெல்லாம் விற்றுப் பண உதவி செய்தார்.

தாகூர் எழுதிய பல பாடல்களை அவரே ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து வைத்திருந்தார். 1912-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்ற

50