பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போது, அங்கிருந்த சில நண்பர்களிடம் அவற்றைப் படித்துக் காட்டினார். அவர்கள் அப்பாடல்களை மிகவும் பாராட்டினார்கள். ‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் அப்பாடல்களை உடனே அவர் வெளியிட்டார். அதற்கு 1913-ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. அதற்கு முன் ஆண்டுதோறும் ஐரோப்பியர்களுக்கே அப்பரிசு கிடைத்து வந்தது. ஆசியாக்காரருக்கு நோபல் பரிசு கிடைத்தது அதுவே முதல் தடவை. பரிசாகக் கிடைத்த 18000 பவுனேயும் அவர் சாந்தி நிகேதனத்துக்கே கொடுத்துவிட்டார் !

தாகூர் எதை எழுதினாலும், அதை அவரே பலரிடமும் படித்துக் காட்டுவார். மாலை நேரங்களில் சாந்தி நிகேதன மாணவர்களையும் நண்பர்களையும் கூட்டி வைத்துக்கொண்டு தமது இனிய குரலில் படிப்பது வழக்கம். தாம் எழுதியிருப்பதை மற்றவர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே அவர் இப்படிச் செய்வார்.

தாகூர் குழந்தைகளுக்காக பிறைமதி என்ற தலைப்பில் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். எல்லாமே உள்ளத்தைக் கவரக்கூடியவை. குழந்தைகளுக்காக அவர் கதைகளும் பாடல்களும் எழுதியதோடல்ல; பெரியவர்களுக்காக எழுதிய கதைகளிலும், கவிதைகளிலும்கூடக் குழந்தை உள்ளத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

தாகூர் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.

51