பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவரும் வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டுச் சுகமாகத் தூங்குவார்கள்.

அன்று ஒருநாள், அரண்மனையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. விருந்து, ஆடல் பாடல் எல்லாம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த விழாவிற்கு சின்ட்ரல்லாவின் இரண்டு சகோதரிகளும் விலையுயர்ந்த ஆடைகளையும், நகைகளையும் அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். ஆனால், சின்ட்ரல்லாவை அவர்கள் ‘அரண்மனைக்கு வருகிறாயா ?’ என்றுகூடக் கேட்கவில்லை !'

சின்ட்ரல்லாவுக்குத் துக்கம் தாங்கமுடிய வில்லை. விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று ஒரு குரல் கேட்டது. “சின்ட்ரல்லா, கவலைப்படாதே. நீயும் போகலாம்” என்றது அந்தக் குரல். உடனே, சின்ட்ரல்லா நிமிர்ந்து பார்த்தாள். எதிரே ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது !

சின்ட்ரல்லா அழுகையை நிறுத்தினாள்; ஆவலோடு தேவதையைப் பார்த்தாள் !

“சின்ட்ரல்லா, உனக்கு உதவவே நான் வந்திருக்கிறேன். நான் சொல்லுவதுபோல் செய். முதலில் ஒரு பூசணிக்காய் வேண்டும். கொண்டுவா” என்றாள்.

“இதோ கொண்டு வருகிறேன்” என்று கூறி விட்டு, சின்ட்ரல்லா தோட்டத்தை நோக்கி ஓடி-

54