பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ட்ரல்லா அரண்மனைக்கு வந்தாள். அவளைப் பார்த்ததும் இளவரசருக்கு அவள் மேல் பிரியம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் வழக்கப்படி அவளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். ஆடல் பாடல்களில் நேரம் போனதே தெரியவில்லை. தற்செயலாக சின்ட்ரல்லா அங்கிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். “ஆ ! மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!” என்று கூறிக்கொண்டே, திடீரென்று அந்த இடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடினாள். ஓடிய வேகத்தில், அவள் காலில் அணிந்திருந்த ஒரு செருப்பு அங்கே விழுந்துவிட்டது. அவள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. காற்றாய்ப் பறந்து அரண்மனைக்கு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வருவதற்கும், கடிகாரம் ‘டாண்’, ‘டாண்’ என்று மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. அதே சமயம், அங்கு நின்ற அவள் ஏறிவந்த கோச்சும், இழுத்து வந்த குதிரைகளும், ஓட்டி வந்த ஆட்களும் மறைந்து விட்டனர். பூசணிக்காயும் எலிகளுமே அங்கிருந்தன! அத்துடன் போயிருந்தாலும் பரவாயில்லையே! அவள் அணிந்திருந்த உயர்ந்த ஆடைகளும் மறைந்து விட்டன! வழக்கமாக அவள் உடுத்தும் கிழிந்த துணிதான் உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்தது.

சின்ட்ரல்லா அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். இரவு வெகு நேரம் சென்று வீட்டுக்குத் திரும்பி வந்த சகோதரிகள், சின்ட்ரல்லா அழுவ-

58