பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தார்கள், சின்ட்ரல்லா அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. கண்ணாடிச் செருப்பை வாங்கிக் காலில் அணிந்து பார்த்தாள். கச்சிதமாக இருந்தது !

‘அடே, இவளுக்குச் சரியாக இருக்கிறதே!’ என்று வயிற்றெரிச்சலுடன் முணுமுணுத்தார்கள் சகோதரிகள்.

“ஆஹா ! நான் வந்த காரியம் வெற்றி !” என்றான் அரண்மனைச் சேவகன்.

அப்புறம்......?

அப்புறம் என்ன? சின்ட்ரல்லாவுக்கும், இளவரசருக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

—இந்தக் கதையில் வரும் ‘சின்ட்ரல்லா’ என்ற பெயர் உலகம் முழுவதும் தெரிந்த பெயராகி விட்டது.

இந்தக் கதையைப் பற்றி ஒரு கதை உண்டு. பிரெஞ்சு தேசத்தில் ‘பியரி’ என்று ஒரு சிறுவன் இருந்தானாம். அவன் தன் அப்பாவான சார்லஸ் பெரால்ட் (Charles Perrault) என்பவரிடம் இந்தக் கதையையும், வேறு சில கதைகளையும் சொன்னானாம். அவர் அந்தக் கதைகளையெல்லாம் மகிழ்ச்சியோடு கேட்டாராம். தாம் கேட்ட கதைகளைக் குழந்தைகள் விரும்பும் வகையில் அழகாக எழுதி வெளியிட்டு விட்டாராம்!

‘சின்ட்ரல்லா’ கதையைப் போலவே, இதுவும் ஒரு கட்டுக் கதை என்று பலரும் கருதுகிறார்கள். ‘பெரியவர் ஒருவர் சொன்ன கதை’ என்று சொல்

60