பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டிலே பிரெஞ்சு தேசத்தில் நாடோடிக் கதைகளுக்கும், தேவதைக் கதைகளுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டது. இந்தியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும்கூடப் பல கதைகளைத் திரட்டிச் சென்றார்கள். அவற்றையெல்லாம் பிரெஞ்சு மக்கள் ஆவலாய்க் கேட்டார்கள். சொல்லச் சொல்ல அந்தக் கதைகளுக்கு மெருகு ஏறியது. கேட்கக் கேட்க மக்களுக்கு இன்பம் பெருகியது. ஒருவரை விட ஒருவர் அந்தக் கதைகளைச் சிறப்பாகச் சொல்லத் தொடங்கினார்கள். இதில் பலத்த போட்டியும் ஏற்பட்டது.

பிரெஞ்சு மக்கள் பொதுவாகவே கலை உணர்ச்சி நிறைந்தவர்கள். அதனால், அவர்கள் இதுபோன்ற கதைகளை மிகவும் விரும்பிக் கேட்டார்கள். மக்களின் இந்த விருப்பத்தை நன்கு புரிந்துகொண்டார் பெரால்ட். அப்போது அவருக்கு எழுபது வயதிருக்கும். ‘நாம் கேள்விப்பட்ட தேவதைக் கதைகளைக் குழந்தைகளுக்கு ஏற்றபடி எழுதி, வெளியிட்டால், எத்தனையோ குழந்தைகள் படித்து இன்புறுவார்களே!’ என்று நினைத்தார். சில கதைகளை எழுதினார். அந்தக் கதைகள் எல்லாமே இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டன !

பெரால்ட், பாரிஸ் நகரத்தில் 1628-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தகப்பனார் ஒரு பாரிஸ்டர். அவருடன் கூடப் பிறந்தவர்கள் மூவர். அவர்தான் கடைக்குட்டி, நால்வரும் நன்கு படித்தவர்கள். எல்லாருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தார்கள். பெரால்ட் சட்ட்ப் படிப்புப் படித்துத் தேறிய-

62