பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருங்காலத்தில் பெரியவர்களாகப் போகும் குழந்தைகளை நினைத்துப் பார்த்தார். 'பெரியவர்களான பின் நல்ல இலக்கியங்களைப் படிக்க வேண்டுமானால், இப்போதே அவர்களைத் தயார் செய்ய வேண்டும்' என்று எண்ணினார். பிறகுதான் குழங் தைகளுக்கு எழுதத் தொடங்கினார்.

பெரியவர்களுக்காகவே எழுதிவந்த பெரால்ட் திடீரென்று குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியதும் பலர் கேலி செய்தார்கள். "அர்த்தமில்லாத கதைகளையெல்லாம் எழுதுகிறாரே!" என்று கூறி ஏளனம் செய்தார்கள். ஆயினும், அவர் குழந்தைகளுக்கு எழுதுவதை நிறுத்தவில்லை; தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்:

அவரது நல்ல எண்ணமும், விடாமுயற்சியும் வீண் போகவில்லை. அவர் படைத்த பாத்திரங்கள் இன்று குழந்தைகளின் உள்ளங்களில் நிலையான இடம் பெற்றுவிட்டன!

64