பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்திசாலிகளின் கண்களுக்குத்தான் அந்தத் துணி தெரியும்; முட்டாள்களின் கண்களுக்குத் தெரியவே தெரியாது !" என்றார்கள்.

சக்கரவர்த்தி அவர்கள் சொன்னதை உண்மை என்று நம்பிவிட்டார். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனேயே, "சரி, உங்களுக்குத் தனியாக ஒரு வீடும், வேண்டிய பணமும் தரச் சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்" என்றார்.

அவர்களுக்குத் தனியாக ஒரு வீடும், ஏராளமான பணமும் தரப்பட்டன. அவர்கள் அந்த வீட்டிலே இரண்டு தறிகளைக் கொண்டுவந்து வைத்தனர். ஆனால் துணி நெய்யவில்லை; நெய்வது போல் பாசாங்கு செய்தனர்.

சில நாட்கள் சென்றன. சக்கரவர்த்தி தம்முடைய முதல் மந்திரியை அழைத்து, துணிகள் எப்படித் தயாராகின்றன என்று பார்த்து வரச் சொன்னார். முதல் மந்திரி அந்த இரண்டு பேர்வழிகளும் இருந்த வீட்டுக்குச் சென்றார், அவரைக் கண்டதும், இருவரும் துணி நெய்வது போல் நடித்தனர்.

மந்திரியின் கண்களுக்குத் துணி எதுவும் தெரியவில்லை. ஆனாலும், அவர் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. 'துணி தெரியவில்லையே’ என்று சொன்னால் முட்டாள் பட்டம் கிடைத்து விடுமே! ஆகையால், அவர், "ஆஹா ! எவ்வளவு

6