பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பிராயச்சித்தம்

படுத்தியிருப்பாள். அது வளர்ந்த சட்டியின் வெளிப் பக்கத்தை எவ்வளவு சுத் த மா க வைத் திருந்தாள் ! அப்பா:ைவக் கேட்டுக் கேட்டு அந்தச் செடிக்கு என்ன என்ன எரு வேண்டுமென்று தெரிந்து வாங்கிப் போட்டாள்.

வெறும் முள்ளோடு கூடிய கொம்பை நட்டாள் பழைய இலைகளெல்லாம் வ டி வி ட் ட ன அப்பா, இது தளிர்க்குமா ?' என்று ஆசையோடு கேட்பாள்.

"பேஷாய்த் தளிர்க்கும், கண்ணே' என்று அப்பா சொல்லும்போது அவளுக்கு உண்டாகும் நம்பிக்கைக்குக் கங்குகரை இல்லை.

  • இன்னும் ஒரு மாசத்தில் பூக்குமா அப்பா ?” அவளுக்கு அவ்வளவு ஆத்திரம் மறுநாளே அது தளிர்த்துப் பூ த் து வி டா த ர என்று அவள் ஏங்குவாள். அந்தக் குழந்தை மனத்தில் இருந்த ஆவல் அப்படியே

பூர்த்தியாவதென்பது சாத்தியமா ?

இலையெல்லாம் வாடிப்போச்சே : இனிமேல் இது பிழைக்குமா அப்பா ?” -

அவளுடைய கண்களில் நீர் ததும்பும். அசடே !

இன்னும் ஒரு மாசத்துக்குள் இதன் பூவை நீ தலையிலே வைத்துக் கொள்ளப் போகிறாய், பார்' என்று தகப்பனார் உற்சாகத்தை மூட்டினார். -

தளிர் விட்டது. அவளுடைய உள்ளத்திலும் உவகைத் தளிர் தோன்றியது. அவளுடைய பராமரிப்பில் ரோஜாச் செடி நன்கு வளர்ந்து வந்தது. தளதளவென்று தளிர்த்து நிற்கும் அதைப் பார்த்தாலே அவளுக்கு ஒர் ஆனந்தம். ஒவ்வொரு தளிரும் அவளுக்கு ஒரு சுவர்ண பத்திரம்.

அரும்பு கட்டிவிட்டது. அவள் எத்தன்ன சாமியை வேண்டிக் கொண்டாள் தெரியுமா ? 'முதற் பூ உனக்குத் தான் தருவேன் பிள்ளையாரே என்று தும்பிமுகவனை வேண்டிக் கொண்டாள். நல்ல வேளையாகக் கண்டம் ஒன்றும் இல்லாமல் ரோஜா நங்கை மலர்ந்தாள், இந்த இளங் குழந்தை பார்வதி ஒரு புதிய சுவர்க்க பதவியை அடைந்தவள் போல ஆனாள். அன்று முழுவதும் அவளுக்கு