பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 99

ஒரே கொண்டாட்டம். அந்தப் பூவை ஆயிரம் விதமாக அலைத்துக் கசக்கி விட்டாள்.

அதுமுதல் ரே ஜாப் பூவின் மோகம் அவளுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் ‘அரும்புகள் எத்தனை இருக்கின்றன? இன்றைக்கு மலரும் அரும்பு எவ்வளவு ? நாளைக்கு விகசிப்பவை எத்தனை ? இன்னும் இரண்டு நாள் கழித்துப் புஷ்பிப்பவை எத்தனை ?’ என்று எல்லாம் கணக்குப் போடுவாள். அதிலே அவளுக்கு ஓர் ஆனந்தம் : ஒரு தனியான இன்ப உணர்ச்சி.

о ס ర "நிச்சயமாக ஒரு பூவைக் காணவில்லை. நேற்றுத் தான் பெரிய அரும்புகளை எண்ணினேன் . ஐந்து அரும்பு கள் இருந்தன. இன்றைக்கு ஐந்து பூ இருக்க வேண்டுமே: நாலே இருக்கின்றன, ஒன்று காணோம், ஆம்! யாரோ ஒன்றைத் திருடி விட்டார்கள்!”

திருடிவிட்டார்கள் என்று எண்ணும் போது அவள் வயிறு பகீரென்றது. இவ்வளவு நாளாக, கண்ணும் கருத்துமாகத் தான் வளர்த்த குழந்தை அது அதன் புஷ்பம் எல்லாம் தனக்கே சொந்தம் அதை ஒருவர் திருடிவிட்டால் . ...!

இந்தத் தி ரு ட் டு அடிக்கடி நடந்தது. பார்வதிக்கு மனம் பொறுக்கவில்லை. திருட்டைக் கண்டு பிடிக்காமல் விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்ட்ாள்.

யார்வதியின் ரோஜாச் செடி அவள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள கைப்பிடிச் சுவரில் வளர்ந்து வந்தது. இந்த வீட்டைச் சேர்ந்தாற்போல உள்ள பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கும் இந்த வீட்டு மாடிக்கும் இடையிலே இடுப்பளவு கைப்பிடிச்சுவர் ஒன்றுதான் தடையாக இருந்தது. அங்கிருந்து இங்கே சுலபமாக வரலாம். இங்கு இருந்து அங்கே சுலபமாகப் போகலாம்.

அந்த வீட்டுப் பையன் பரமசிவம் பன்னிரண்டு வயசு உள்ளவன். அவன்தான் ரோஜாப் பூவைத் திருடினான் என்பதைப் பார்வதி கண்டு கொண்டாள். 'திருட்டுப் பயல்