பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 101

விட்டான். அவள் - பாவம் குழந்தை! திடுக் திடுக்கென்று இருதயம் அடித்துக் கொண்டது. அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இரண்டு நாள் தைரியமாக மேலே ரோஜாப் புஷ்பம் கூடப் பறிக்கப் போகவில்லை. தலை வலியென்று சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை. இ. ர ண் டு நாள் இந்தச் ச க் கு; பிறகு சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமைகள் வந்து விட்டன.

என்ன இருந்தாலும் நாம் பண்ணினது தப்பு’ என்றே அவள் உள்ளம் அடித்துக் கொண்டது. பதிலுக்குப் பதில் அடிக்காமல் விடுவேனா?’ என்று அவன் மனம் துடித்தது. ઈ. ထိဒံ ထိို ஒரு வாரம் ஆயிற்று. பார்வதி ஆற்றங்கரைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவளுடன் பத்து வயசுப் பெண் ஒருத்தியும் சென்றாள். பரமசிவம் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான். பார்வதியைக் கண்டவுடன் அவனுடைய உள்ளம் கொதிப்பு மூண்டது. ஓர் இமைப் பொழுதில் அவளுக்கு அருகில் வந்து தன் பலங் கொண்ட மட்டும் ஓங்கி ஒர் அறை அறைந்து விட்டு ஓடினான்.

குழந்தை கதி கலங்கி விழுந்து விட்டாள். பக்கத்தில் நின்ற பெண்ணும் பயந்து ஓவென்று கூவினாள். ஒடிப் போய் பார்வதியின் வீட்டில் தெரிவித்தாள். கூட்டம் கூடியது. பார்வதியின் கன்னம் வீங்கிவிட்டது. பரம சிவம்தான் அடித்தானென்பதைப் பார்வதியின் வீட்டார் அறிந்து அவனை வையத் தொடங்கினர். அவனை அவள் அடித்த சங்கதியும் வெளி வந்தது. இப்படிக் காரண காரியங்களைச் சர்ச்சை செய்ய இரண்டு வீட்டாருக்கும்

சண்டை முற்றி விரோதம் உண்டாயிற்று.

பார்வதியின் தகப்பனார் ஒரு செட்டியார் கடையில் குமாஸ்தாவாக இருந்தார். செட்டும் கட்டுமாக இருத்து இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து அந்த மாடி வீட்டை விலைக்கு வாங்கினார். வீட்டை அழகாக வைத்துக் கொள்வதில் அவருக்கு அதிகக் கவனம், அந்தக் குணமே பார்வதியினிடத்திலும் இருந்தது.