பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...! 04 - பிராயச்சித்தம்

ரோஜாப்பூச் செடிகூட இப்பொழுது இல்லை. அந்தச் சண்டையில் இருந்து பார்வதி பூ ச் ெச டி வளர்ப்பதையே விட்டு விட்டாள். அ வ ள் வே யூ விஷயங்களில் சிரத்தை கொள்ள ஆரம்பித்து விட்டாள். பெண்களுக்கு வயசு ஆக ஆக எ த் த ைன யே ஆசைகள் உண்டாகின்றன. அவளுக்கும் சங்கீதப் பித்து, புஸ்தகப் பசி இ ன் வ க ள் உண்டாயின. பழைய ரோஜாப்பூ ஞாபகத்தை அவள் அறவே மறந்து விட்டாள். அவளுடைய சரீர அழகோடு ச | ரீ ர இனிமையும் மேன்மேலும் வளர்ச்சி பெற்றது. கல்வியிலும் அவள் சிறப்புப் பெற்றாள். -

பரமசிவமும் காலமாகிய நதியிலே எவ்வளவோ தூரம் வந்து விட்டான் . இன்று அவன் பழைய பரமசிவம் அல்ல. பழைய முரடன் அல்ல. அன்பும் தியாகமுமே மக்களுக்கு அமரத்துவத்தை உண்டாக்குபவை எ ன் ப ைத அவன் உணர்ந்து கொண்டான். சென்னையில் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே அ வ னு க் கு அறிவு அதிகம். படிப்புக்குரிய செளகரியங்களும் இருந்தன. தடை யொன்றும் இல்லாமல் அவனுடைய கல்வி சிறந்து வந்தது. அவன் உள்ளம் உலகத்தை ஊடுருவி உணரத் தொடங்கியது. இளம்பெண்ணை ஓங்கி அடித்த அடியை அவன் மாத்திரம் மறக்கவே இல்லை. அதனால் உண்டான தழும்பு அவன் உள்ளத்தில் மாறவே இல்லை. அந்தப் பெரிய குற்றத்திற்கு என்ன பரிகாரம்?’ என்று அவன் யோசித்து யோசித்து உருகினான். பல ந ள் மணிக்கணக்காகத் தன்னுடைய கொடிய செயலுக்காக வருந்தி உருகினான்.

அன்று அவனுக்குப் பன்னிரண்டு வயசு. இன்றே" இருபது வயசு, இந்த எட்டு வருஷங்களில் அவனுடைய உணர்ச்சி விரிந்து விசுவரூபம் எடுத்தது. அன்று அவனு டைய மனத்தே உண்டான பச்சாதாபம் கடுகளவாகவே இருந்தது; இன்று அது மலையளவாக வளர்ந்து விட்டது. அவன் உள்ளம் உலக இயல்பை உணர உணர அதன் கண் அன்பும் இரக்கமும் அதிகமாயின. ஒன்றும் அ றி ய த பே ைதப் பெண்ணுக்குத் துன்பமிழைத்த கொடுமையைக்