பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

அன்றே பரமசிவம் தன் தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதினான். தனக்குப் பிடித்த பெண் ஒருத்தி இருப்ப தாகவும் அவளைத் தான் கல்யாணம் செய்து கொள்ள எண்ணி இருப்பதாகவும் பெண் வீட்டார் ஏழைகள் என்றும் அந்தப் பெண்ணை மணப்பதற்குத் தடை செய்யக் கூடாது என்றும் எழுதியிருந்தான். அவனுடைய தகப்பனார் அதைப் பார்த்துச் சிரித்தார். உன் பிள்ளையின் பவிவுைப் பார்! எங்கேயோ ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறான் போலிருக் கிறது. என்ன தர்ம சங்கடமோ!' என்று தம் பத்தினியைப் பார்த்துச் சொன்னார்.

'அப்படி ஒன்றும் தப்புத் தண்டாவுக்குப் போகிறவன் அல்ல அவன். ஏதோ நம்முடைய சாதியிலே நல்ல பெண்ணாக இருக்கும். ஏழையாயிருந்தால் என்ன? அவள் கொண்டு வந்து தானா நாம் சாப்பிட வேண்டும்? அவன் மனசு பிடித்தால் அதுவே போதும்' என்று அவள் பதில் கூறினாள். - *

ளப் இன்ஸ்பெக்டருக்குக் கோபம் வந்து விட்டது. 'பிள்ளைக் கேற்ற தாய்தான்!' என்று உறு மி ன ர். "இந்தப் பயலுக்குச் செல்லம் கொடுத்ததெல்லாம் இதற்குத் தானா?' என்று முழங்கினார். தம் பிள்ளைக்குப் பதிலே போடவில்லை; ம ற் றொரு கடிதம் வந்தது : "நான் விளையாட்டுக்கு எழுதவில்லை. எல்லாம் ஆண்டவன் செயல். ஆண் ட வ ன் அருளை மு ன் னி ட் டு இந்தத் தீர்மானத்துக்கு வ ந் தி ரு க் கி .ே ற, ன் உங்களுடைய அநுமதியை வேண்டி நிற்கிறேன். என் மனந்தில் இருக்கும் வேதனை தீர வேண்டுமானால் இதற்கு ஸம்மதியுங்கள்.

அதென்ன வேதனை? ஈசுவர சாகூரியாம்! ஆண்டவன் செயலாம். டஸப் இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. "பயல் எங்கேயோ இந்தக் காந்திக் கட்சியில் சேர்ந்து கொண்டு அசட்டுப் பெண் ஒருத்தியைப் பார்த்துப் பிரமித் திருக்க வேண்டும்’ என்று அவர் எ ண் ணி னார். அவர்