பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபீஸ் மானேஜர்

தாமோதர செட் டி யார், பு தி தா. க ஆரம்பித்த "குட்ரயுக்தி' என்னும் பத்திரிகையின் ஆசிரியர். அவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். அவருடைய தர்மபத்தினி லோக விஷயங்களுக்கெல்லாம் அகராதி. விளக்கு மாற்றுக்கு விலை முதல், வி ய ன் னா நகரத்துச் சமாசாரம் வரையில் அவளுக்குத் .ெ த ரி யு ம். தாமோதர செட்டியாரை ந ச் சு நச்சு என்று நச்சி ஒவ்வொரு ச மா சா ர ம ா க அறிந்து கொள்வாள். *

செட்டியார் நல்ல எழுத்தாளர் என்று சொல்வதற்கு இல்லை. அவருக்குச் சுமாராகக் கதை எழுதத் தெரியும்: கட்டுரையும் எழுதுவார். எல்லாம் ஒரே மூச்சில் எழுதினால் தான் வரும். ஏதாவது எழுத ஆரம்பித்தால், யோக ம் செய்பவர் மாதிரி ஏகாக்கிரசித்தம் உடையவராகி விடுவார். காரியாலயத்தில் அவருடைய ஏகாக்கிரசித்தத்திற்குப் பங்கம் வருவதில்லை. வீட்டிலோ அவருடைய சகதர்மிணிக்கு அவர் எழுதத் தொடங்கும்போது தான் சந்தேகங்கள் வந்து விடும். ராத் தி ரி சாப் பி ட் டு விட்டு ஏதாவது கதை எழுத உட்காருவார். அவர் தர்ம பத்தினி அருகில் இருப்பாள். 'இன்றைக்கு வெற்றிலைக்காரன் ஏன் வரவில்லை?” என்று ஒரு கேள்வி ேப ா டு வா ஸ். அப்பொழுது தான் செட்டியார் ஒரு காதல் க ைத ைய ச் சித் திரி த் துக் கொண்டிருப்பார். - - - -

ஜப்பான் யுத்தத்தினால் பவுன் விலை ஏறப்போகிற தாமே?’ என்று வெளிநாட்டு வியவகாரத்தில் பாயு ம் அம்மாளுடைய கேள்வி.

"கொஞ்சம் பேசாமல் இரு' என்று சொல்லி விட்டுச் செட்டியார் எழுதத் தொடங்குவார். நாலு வ ரி எழுதி இருப்பார். - - நேற்று வ ந் த கடிதத்திற்கு இன்னும் பதில் போட வில்லையா?' என்று அம்மாள் கேட்பாள்.