பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 G நீலமணி

ஒரங்களெல்லாம் பிய்ந்து கொஞ்சநஞ்சம் ஒட்டிக் கொண்டு இருந்தன.

ஜபம் பண்ணுகிறார் தீட்சிதரென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். கண்ணை மூ டி ய ப டி யே அவர் தியானத்தில் ஆழ் ந் தி ரு ந் தார் என்ன தியானம்? உள்ளமாகிய ஒடம் தரித்திர சா. க ர த் தி ன் للاسا (5زIE) له وي கரையைக் காண முடியாமல் தத்தளித்தது. -

மணி ஒன்பது. ராஜராஜேசுவரி பூஜை ஆரம்பிக்கப் பட்டது. ஆடம்பரம் ஒன்றும் இல்லாமல் அரை மணியில் முடிந்தது. அந்தக் காலத்தில் நவராத்திரி என்றால் அவர்கள் வீடு பெரிய கோவிலாக இருக்குமாம். ஊர் முழுதும் பூஜையைத் த ரி கி க் க வருவார்களாம். ராஜ ஜே சு வ ர ரு ைட ய பிதாமகருக்குத் தகப்பனாராகிய அம்பிகாபதி தீட்சிதர் பெரிய மகானாம். ராஜாக்களெல்லாம் நவராத்திரிப் பூஜைக்கு வேண்டிய திரவியங்களை அனுப்பு வார்களாம். ஒவ்வொரு நாளும் பிராம்மண சந்தர்ப்பனை நடக்குமாம். ஹாம் இந்தப் புராணமெல்லாம் இப்பொழுது எதற்கு ? இந்த நவராத்திரி மாமுண்டியா பிள்ளை வாக்கு அளித்த ஒரு சிப்புப் பழத்திலும் இரண்டனாக் கற்பூரத்திலும் நடக்க வேண்டியிருந்தது. ஐந்து சம்புடங்கள் நி ைற ய உள்ள சாளக்ராமாதிகளுக்கும், பத்துப் பன்னிரண்டு செப்பு விக்கிரகங்களுக்கும், இருபது .ெ சப் புத் தகடுகளுக்கும் அவைகளை அந்தக் காலத்தில் யந்திரங்களென்று சொல்லி வந்தார்கள் - பூரிராஜராஜேசுவரிக்கும் இவை எம்மாத்திரம்? தீட்சிதருக்குத்தான் திருப்தியுண்டாகப் போகிறதா ? -

பூர் ராஜராஜேசுவரி ஒரு பழைய சுண்ணந் தீற்றிய விக்கிரகம். அந்தக் காலத்தில் அந்தத் தேவிக்குத்தான் மகிமை அதிகம். தேவியினுடைய திருமேனி வண்ணங்கள் எல்லாம் இப்பொழுது, மங்கி விட்டாலும், திருவிழிகளிலுள்ள ஒளி மங்கவில்லை. அந்த விழிகளில் விலைவரம்பற்ற நீல மனிகள் புதைக்கப்பட்டிருந்தன. ராத்திரி வேளையில் ஒரு சிறிய விளக்கு வெளிச்சத்தில் கூட அவ்விழிகளில் உண் டாகும் ஜோதி அந்த விட்டிற்கே விளக்கத்தை அளித்தது.