பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 119.

'இந்த ஆபீஸ் ரூம் இப்படியே இருக்கட்டும். நீங்கள் இந்த ஆ பீ ஸி ன் சொந்தக்காரராகவே இருங்கள், என்னுடைய உதவியில்லாமல் உங்கள் ஆபீஸ் வேலை நடக்காதபடியினால் நான் இந்த ஆபீஸ் மானேஜ’ராக இருக்கிறேன். ஏன்? சரிதானே?’’

'சபாஷ்!’ என்று மேஜைமேல் தட்டினார் செட்டியார் உத்தரவை எதிர்பாராமலே நிலைக்கு வெளியில் நின்றிருந்த "மானேஜர்' உள்ளே புகுந்தார், -

உயர்ந்த சித்திரம்

ராமசந்திரனை நான் இ ர ண் டு மாத காலத்தி, அளந்து விட்டேன். மங்கலத்துக்கு வந்து இரண்டு மாதங் களுக்குள் ஒர் அரிய நண்பனைக் கண்டு பிடித்தது எனக்கு ஒரு பெரிய லாபந்தான். அவனோ சிறந்த கலாரசிகன். இணையற்ற ஓவியப் புலவன். அவனுடைய சித்திரங்கள் நாளுக்கு நாள் ஜீவ களையைப் பெற்று வந்தன. அவை புகாத காட்சிகளே இல்லை. -

எனக்குச் சித்திரங்களின் கலை நுட்பங்களை அறியும் தகுதியில்லை. ஆனாலும் கலைகளில் அபிமானமும், கலைப் புலவர்களிடம் அன்பும் உண்டு. சித்திரத்தை அநுபவிக்கும் ஆற்றல் ராமச்சந்திரன் பழக்கத்தால் எனக்கு அதிகமாகிக், கொண்டு வந்தது, - - அவனுடைய அநாயாஸமான செயல்களில் எத்தனை விசித்திரமான விளைவுகள் அவ னு டை ய நட்பைப் பெறுவதற்கு நான் என்ன த வம் செய்திருக்க வேண்டும்! கலைத் திறமை கிடக்கட்டும். அவனுடைய குணந்தான் என்ன சாமான்யமானதா? அவனது நெகிழ்ந்த உள்ளத் திலே பொங்கும் அன்பினது நிலையை, அவனோடு பழகின.