பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ைத சொல்லுகிறார் கி. வா. ஜ. 125。

கதை பேசின. பகலில் கண்ணாரப் பார்த்து அப்பெண் குதிரை உருவத்தின் அழகைப் பருகிக் களித்து ராத் திரியில் அந்த எழில்மேனியை வருணிப்பதிலே ஊக்கமும் இன்பமும் பெற்றன.

இப்படிக் கழிந்துகொண்டு வந்த காலத்திலே ஒரு நாள் விடிய ஐந்து நாழிகைக்கு முன் அருணன் வழக்கம் போல் இந்திர திக்காகிய கிழக்குத் திசையிலே ஏழு பசுங் குதிரை களையும் கொண்டு வந்து நிறுத்தினான் நிறுத்திவிட்டுத் தான் செய்ய வேண்டிய பூஜை புரஸ்காரங்களை செய் வதற்காக ஆகாச கங்கையை அடைந்தான். அவன் வந்து ஆதித்தனது ரதத்தைப் பூட்டும் வரையில் பச்சைக்குதி ரைகள் கொண்ணாரம் போட்டுக் கொண்டிருப்பது வழக்கம். அன்று எதிர்பாராதபடி இந்திரனது குதிரையாகிய உச்சைசிரவம் அந்த வழியே வந்தது. அப்பொழுது சூரிய பகவானுடைய கு திரைகள் வடகடலில் தனியரசாளும் தேஜோமய அசுவ மானினியைப்பற்றித் தங்களை மறந்து பேசிக் கொண்டி ருந்தன. அவைகள் பேசிய பேச்சில் இங்கொன்றும் அங்கு ஒன்றுமாகக் காதில் விழ, வந்து கொண்டிருந்த உச்"ை சிரவம் அந்த வருணனையை ரசித்தபடி சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டது.

"தூரத்திலிருந்து பார்க்கும் போதே கண்கொள்ள அழகோடு விளங்கும் அந்தக் குதிரை நல்லாளின் திவ்ய ரூப செளந்தரியம் அருகிலே சென்று கண்ணாரப் பார்த்தால் எப்படி இருக்கும்!’’ என்று பெருமூச்சு விட்டது ஒரு குதிரை.

“ வடகடலினிடையே வீ ற் றி ரு க் கும் அந்த அசுவ மோகினி என்றைக்காவது வானுலகத்துக்கு உலாவ வரக் கூடாதோ !’’ என்றது வேறொரு புரவி. . .

பிரம்ம சிருஷ்டியிலே இவ்வளவு அழகு பொருந்தி யிருப்பது அத்யாச் சரியம்! என்றது மூன்றாவது பரிமா.

பிரம்ம சிருஷ்டி என்று சொல் லா தே பிரம்ம தேவனுக்கு அவ்வளவு கைவன்மை இருக்க நியாயமே இல்லை. இது பரமேசுவர சிருஷ்டி. ஊ | வ ச பெண் குதிரை வடிவம் எடுத்தபோது நம்முடைய சூரிய பகவான்