பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 127

வருணனையில் அக்குதிரைகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டன.

அவ்வளவையும் கேட்டு வந்த அந்தத் துரகேந்திரனுக்கு உள்ளத்தில் ஏதோ ஒர் உணர்ச்சி உண்டாகி விட்டது. மயல் மீறியது. கண் சுழன்றது. பலமெல்லாம் போய் விட்டது போன்ற சோர்வு உண்டாயிற்று. இந்தக் கண் களால் ஒரு முறை அந்த அசுவசுந்தரியைப் பாராவிட்டால் ஒரடியும் எடுத்து வைக்க யோக்கியதையில்லை’ என்ற எண்ணத்தோடு அது விடை பெற்றுக் கொண்டது.

2

கடிமணப் படலம்

வடதிசைப் .ெ ப ருங்க ட லி ல் கொலு வீற்றிருக்கும் குதிரைப் பெருமாட்டி தாளஜதி போட்டு ஆடுவது போலவும், அந்த நர்த்தனத்தின் முடிவிலே இனிய கர்ஜனையினால் முத்தாய்ப்புக் கொடுப்பது போலவும், கழுத்தை மேலும் கீழும் ஒய்யாரமாக அசைத்துக் கண்டோர் கருத்தை வளைத்துப் பிடிப்பது போலவும் இன்னும் என்ன என்னவோ விதமாக உச்சைசிரவம் கற்பனை செய்து பொழுதைப் போக்கியது.

இந்திரன் என்றைக்கு வடதிசைக்கு எழுந்தருளுவான் என்று த வ ம் பண்ணிக்கொண்டு காத்திருந்த உச்சை சிரவத்துக்கு அத்தகைய சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அது வடதிசைப் பவனியை எதிர்பார்க்கப் பார்க்க அந்த நாள் வராமல் தூரத்தில் போய்க் கொண்டே இருந்தது. பொறுமை இழந்து மயல்மீறிப் புழுங்கிய நெஞ்சுடன் தேவ லோகக் குதிரை நாட்களைக் கழித்தது. -

கடைசியில் அந்த நாள் வந்தது. இந்திரன் மேரு மலைக்குப் பிரயாணமானான். வடதிசையில் இருக்கும் பொன் மலையை நாடி அசுவாரூடனாய்ச் சென்ற இந்திரன் அங்குள்ள வித்தியாதர நகரத்துக்குச் சென்று வித்தியாதர